ஜெயலலிதா பதவியேற்ற அதே நாளில்., அதிமுக ஆட்சியை கவிழ்க்கிறாரா ஸ்டாலின்?!  - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சிக்கான தீர்ப்பு ஜெயலலிதா பதவியேற்ற அதே நாளில் வெளிவரவுள்ளது என்பது தான் தற்போது நடக்கும் சுவாரஸ்யம். 

2011-ம் ஆண்டு திமுகவை வீழ்த்தி நான்காவது முறையாக ஜெயலலிதா ஆட்சியமைத்தார். அதன் பின்னர், 2016-ம் ஆண்டும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
.
மே 19-ம் தேதி 2016 ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மே 23-ம் தேதி 2016ல் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். மேலும், அப்போது, சுமார், 25 ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக ஒரு கட்சி இரண்டாவது முறை வெற்றி பெற்றது என சாதனை படைத்தார். 

eps ops seithipunal க்கான பட முடிவு

அவருடைய இறப்பிற்கு பின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுகவையும், தமிழக அரசின் பொறுப்பையும் ஏற்றது. இந்நிலையில், தற்பொழுது ஆட்சியினை தீர்மானிக்கும், 22 எம்.எல்.ஏக்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதன் முடிவுகள் தற்பொழுது வெளியாகி வருகிறது. அதில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவில் இதே நிலை நீடித்தால் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு திமுக ஆட்சியமைக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெ ஆட்சியமைத்த மே 23 ஆம் தேதியே அதிமுக ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin may win in by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->