அதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!! மு.க.ஸ்டாலின் விடும் சவால்!! - Seithipunal
Seithipunal



பாஜக-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் பேசிவருகிறாரா என்று தமிழிசை சௌந்தர்ராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை, அது உண்மைதான் என்று தெரிவித்தார். 

இதனையடுத்து, பா.ஜ.கவுடன் தி.மு.க. பேசிக்கொண்டிருப்பதாக பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் திருமதி தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது திரு நரேந்திர மோடியோ மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்  என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்.. அதேபோல் நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார், பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என்று பச்சை பொய் நிறைந்த ஒரு பேட்டியை தமிழிசை சவுந்தரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதன் முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டு சென்ற உடனே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து தெளிவான பத்திரிகை குறிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் அதனை தவறாக திரித்துவிட்டு, தி.மு.க.வுக்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை நடைபெற இருக்கும் 4 இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருக்கிறார் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin gets challenged to BJP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->