1 ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் மூடல்.. கலால்துறை உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கடுமையான அளவு உச்சம் பெற்றுள்ளது. 

மேலும், மாவட்ட வாரியான பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதால், அந்தந்த பகுதிகளை பொறுத்து மாவட்ட நிர்வாகமும் தளர்வற்ற முழு ஊரடங்கை அறிவித்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் பெரிய அளவிலான தாக்கம் இல்லாது இருந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் முதல் 5 ஆவது மாவட்டமாக மாறியுள்ளது. மொத்தமாக அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,959 ஆக இருக்கிறது. 2,612 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 57 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivilliputhur town wine shop closed due to corona Lockdown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->