மீண்டும் துவங்கிய இலங்கை கடற்படையின் அட்டூழியம்.! 4 தமிழர்களை கைது செய்து படகுகளை சேதப்படுத்திய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு விதமான பிரச்சனைகள் தலைதூக்கி இருக்கும் நிலையில்., அதனை சரி செய்வதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில்., தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும்., பின்னர் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல போராட்டங்கள் செய்தாலும்., அரசிற்கு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்தாலும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. 

இராமநாதபுரம் இராமேசுவரம் பகுதியை சார்ந்த மீனவர்கள் நேற்றிரவு நெடுதீவிற்கு அருகே உள்ள கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில்., அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர் என்று கூறியுள்ளனர். 

மேலும்., அவர்கள் வைத்திருந்த மீன் வலைகளை சேதப்படுத்தி., அவர்களின் படகுகளை சேதப்படுத்தி அவர்கள் நால்வரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவலை அறிந்த உறவினர்கள் கண்ணீருடன் செய்வதறியாது திகைத்துள்ளனர். 
 

English Summary

srilankan navy force arrested rameswaram fishermen


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal