இராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் கற்களால் தாக்கி விரட்டியடிப்பு - சிங்கள கடற்படை வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் எச்சரித்து மிரட்டி விரட்டியடித்துள்ளது.

இந்திய எல்லைகளுக்குள் மீன்படிக்கும் தமிழக மீனவர்களை, எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி விரட்டியடிக்கும் செயல் இலங்கை கடற்படையால் தொடர்ந்து நடந்து வருகிறது. சில நேரங்களில் தமிழக மீனவர்களை தாக்குவதும், வலைகளை அறுத்து கடலில் எறிவதும் என அட்டகாசம் செய்து வருகிறது. 

கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக நடைபெற்ற துப்பாக்கி சூடு நிகழ்வுகள் போன்ற துயரங்கள் நடைபெறாமல் இருந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இவர்களுடன் அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் சேர்ந்து கொண்டு, மறைமுக கூட்டணி வைத்து தமிழக மீனவர்களை விரட்டியடிக்கின்றனர். 

இந்நிலையில், இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சார்ந்த மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் கச்சத்தீவு அருகே மீன்படித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். 

எல்லை தாண்டி வந்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து அட்டகாசம் செய்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் எச்சரித்து மிரட்டி விரட்டியடுத்துள்ளனர். இதனால் பெரும் சோகத்துடன் மீனவர்கள் கரைதிரும்பி இருக்கின்றனர். 

மேலும், 20 க்கும் மேற்பட்ட விசைப்பாடுகளை விரட்டியடித்த அதிகாரிகள், மொத்தமாக ரூ.1 இலட்சம் அளவில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். கற்களை கொண்டு இலங்கை கடற்படை அதிகாரிகள், தமிழக மீனவர்களை தாக்கியதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SriLanka Navy Warn with Gun to Tamilnadu Rameswaram Fisherman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->