காங்கிரஸ் வெற்றிபெற சென்னையில் யாகம்!! மதச்சார்பின்மைக்கு ஏற்பட்ட மாரடைப்பு!!  - Seithipunal
Seithipunal


மே 19ஆம் தேதியுடன் 2019 தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், நாளை (மே 23) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றது. மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் அனைத்தும் கூறுகின்றன. இதனை தொடர்ந்து, நேற்று டெல்லியில், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது. இருப்பினும், நமது கட்சியினர் மனம் தளரக் கூடாது. ஏனென்றால், பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தோல்வியடைந்துள்ளது." என அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நாட்டில் மலர வேண்டம் என சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மகளிரணி சார்பில் ஸ்ரீமஹா சண்டியாகம் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. நேற்று தொடங்கிய இந்த யாகம் நாளை வரை நடைபெருகிறது.

இந்த யாகத்திற்காக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அடங்கிய பேனரில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கருணாநிதி, ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த யாகம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை நடக்கும் தெரிகிறது. 

முஸ்லீம்லீக் மற்றும் பிற சாதிய அடிப்படையிலான கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி என கூறுவது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வழக்கம். தற்பொழுது நடைபெறும் யாகம் கூட மதச்சார்பற்று தான் நடைபெற்று கொண்டிருகிறதோ? என்னவோ..?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri maha sandiyagam in chennai for congress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->