குதூகலமாக இருக்க... சோத்துப்பாறை அணை...!! - Seithipunal
Seithipunal


சோத்துப்பாறை அணை தேனியிலிருந்து 25கி.மீ தொலைவிலும், பெரிய குளத்திலிருந்து 11கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோத்துப்பாறை அணைக்கட்டு கொடைக்கானல் மலையின் பின்பகுதியில் உள்ள கண்கவரும் சுற்றுலாத் தலமாகும். 

இந்த அணைக்கட்டிற்கு குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ வந்து குதூகலமாக இருக்க முடியும்.

இந்த அணைக்கட்டிற்கு செல்லும் வழியில் இருபுறமும் மாமரங்கள் நடப்பட்டிருக்கின்றன. 

கோடைகாலத்தில் இந்த அணைக்கட்டிற்கு சுற்றுலாப் பயணமாக வந்தால், நீர்த்தேக்கத்தின் அழகை ரசித்தபடியே, மாம்பழச் சாற்றினை பருகிட முடியும்.

இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு அழகிய தோட்டமும், அங்கு பார்வையைக் கவரும் விளக்கு கம்பங்களும் உள்ளன.

கொடைக்கானலில் உள்ள பேரிஜாம் ஏரி மற்றும் சிறுசிறு மழைக்கால நீரோடைகளின் தண்ணீரும் இந்த நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

2.831 கனஅடி நீரைத் தேக்கி வைக்கும் திறனுள்ள இந்த நீர்த்தேக்கம் தான் பெரிய குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர்ப்பாசன தேவைகளை தீர்த்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sothuparai dam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->