கடற்காற்றின் சுகம்... அற்புதமான இயற்கை காட்சி.. சொத்தவிளை கடற்கரை..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 11கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து ஏறத்தாழ 13கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய நீண்ட கடற்கரை தான் சொத்தவிளை கடற்கரை ஆகும்.

சிறப்புகள் : 

சொத்தவிளை கடற்கரை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ள இடமாக விளங்குகிறது.

இந்தப்பகுதியில் காட்சிக்கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இவற்றின் மேல் இருந்து இந்த அழகான கடற்கரையின் பகுதி முழுவதையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துக் கொள்ள முடியும்.

சொத்தவிளை கடற்கரைப் பகுதி அழகிய நீண்ட மணல் பரப்புடன் நமக்கு மிகவும் அற்புதமாக காட்சியளிக்கும்.

இக்கடற்கரைக்கு அருகில் அழகிய புல்வெளிகள், சிறுவர் பூங்காக்கள் அமைந்துள்ளன. 

நாம் இந்தக் கடற்கரை சாலையில் செல்லும் போது கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கலாம். மேலும் நம் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

இங்கு இளைப்பாறுவதற்கு சிறு சிறு குடில்கள் என்று கடற்கரையில் சுற்றுலாத்துறை அழகுப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது.

இயற்கையான கடற்கரைகளில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக சொத்தவிளை கடற்கரை திகழ்கிறது.

சுற்றுலாப் பயணிகள் மாலை வேளைகளில் இந்த கடற்கரைப் பகுதிக்கு சென்றால் அதன் இயற்கை அழகுகளைப் பார்த்து ரசிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sothavilai beach in kanyakumari


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->