உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் தமிழகத்திற்கு பல கோடி இழப்பு.! தகவல்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காத காரணத்தால் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிதி ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு தரவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் கூறியுள்ளார்.

சிவகங்கையில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தின்  முடிவில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது உள்ளாட்சித் தேர்தல் நடக்காத காரணத்தால் உள்ளாட்சி வளர்ச்சி  மற்றும் ஊரக நிதி ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு தரவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Image result for ullatchi therthal

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் பழி பழிவாங்க படுகின்றனர். இதை கைவிட வேண்டும். மேலும் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் தேர்வான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இயக்குநரகம் முன்பாக ஜூலை முதல் வாரம் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

some projects lost in tamil nadu elections. Information inside


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->