கிரெடிட் கார்டுகளுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் - இனி வாகன் ஓட்டிகள் கையில் கட்டாயம் இது இருந்தே ஆக வேண்டும் : தமிழகத்திலும் தொடங்கிய மாற்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி நாட்டிலேயே முதன் முறையாக, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான லைசென்ஸ், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை துவங்கி வைக்கப்பட்டது.

இதில் கிரேடிட் கார்டுகளுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இவ்வகை கார்டுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை சென்னையில் மட்டும், ஸ்மார்ட் லைசென்ஸ்மற்றும் ஆர்சி புக்குகள்,4,200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “சென்னையில், மீனம்பாக்கம், கே.கே.நகர்,திருவான் மியூர், சோழிங்கநல்லூர், அயனாவரம், ராயபுரம், பூந்தமல்லி, உள்ளிட்ட,14 இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு கடந்த, ஜனவரி 22 முதல் ஸ்மார்ட் லைசென்ஸ், ஆர்சி புக் வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும், 150 பேருக்கு லைசென்ஸ், 150 பேருக்கு ஆர்சி புக் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை மொத்தமாக, 4,200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smart vehicle card


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->