ஆள் தான் சார் சின்ன பையன்.!! செய்ற வேலை எல்லாம் பயங்கரம்.!!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில், 5,500 ஏக்கர் நிலம் பாசனம் பெற உதவும் 560 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் பேராவூரணியில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குப்பை மேடாக காட்சியளித்து வருகின்றது. இந்நிலையில், இப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து, குளத்தை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என முடிவெடுத்து கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி ஜூன் 24-ம் தேதி தூர்வாரும் பணியை துவங்கினர். 

இதற்காக பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை, நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோரின் மகன் தனிஷ்க்(14), 8-ம் வகுப்பு படித்து வருகின்றார். அந்த சிறுவன் தனது சிறுசேமிப்பு பணத்தை தூர்வாரும் பணிக்காக கொடுத்துள்ளார். 

அவரது ஏழு மாத சேமிப்பில் ரூ.876 சேமித்து வைத்துள்ளார். தூர்வாரும் பணியை மேற்கொள்ளும் இளைஞர்கள், "முதலில் எப்படி தூர்வார போகிறோம் என குழப்பமாக தான் ஆரம்பித்தோம். ஆனால், ஒவ்வொருவரும் தானாக முன்வந்து உதவி செய்வதை பார்க்கையில் மிகுந்த உற்சாகத்தை இது தருகிறது." என அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

small boy helps to clean lake in tanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->