வெள்ளையன் ஏன் தாண்டி போனான் தெரியுமா..? உரிமையாளர் கூறிய சீக்ரெட்..! - Seithipunal
Seithipunal


துரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்றனர். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கல் அன்று காலை துவங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 923 வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காணும் பொங்கலான நேற்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலையில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 வீரர்கள், 800 காளைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5.10 வரை நடைபெற்றது. போட்டிகளில் பல வீரர்கள் மற்றும் காளைகள் கலந்து கொண்டு மாஸ் காட்டினார். இதனைப்போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிகட்டுப்போட்டி நடைபெற்று வந்தது. 

இது தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், ஜல்லிக்கட்டு காளை வாடிவாசலில் இருந்து வெளியே வந்த நேரத்தில், தாயொருவர் தனது இரண்டு மகன்களுடன் நிற்கவே, அதிவேகத்தில் ஓடி வந்த காளை இவர்களை கண்டதும், அவர்களை தாக்காது இருக்க தாண்டி குதித்து சென்றுள்ளது இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இதுகுறித்து காளையின்  உரிமையாளர் சுந்தரம்  பேட்டி அளித்துள்ளார். அதில், நான் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன், என் காளையின்  பெயர் செல்வம் என்கிற வெள்ளையன். வெள்ளையனுக்கு 6 வயது ஆகிறது, பொதுவாக வெள்ளையனை  மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுக்கு அழைத்து செல்வேன். 

அதன்படி  கடந்த சில நாட்களுக்கு முன்பு சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறி பாய்ந்து சென்ற எனது காளை பெண் மற்றும் அவரின் குழந்தைகளைப் பார்த்துத் தாண்டி சென்றது மிகவும் பிரமிப்பாக இருந்தது. நான் வெள்ளையனை என் மூன்றாவது மகனாக தான் நினைக்கிறேன். அது என் வீட்டு  பெண்கள் என்று நினைத்து அந்த பெண்ணை தாண்டி  சென்றது என்று நினைக்கிறேன். இது என் குலதெய்வத்தின் செயல் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagangai manjuvirattu bull


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->