காவல் அதிகாரி போல வேடமிட்டு வழிப்பறி... காவல்துறையினர் பிடிக்க செல்கையில் தவறி விழுந்து கையை முறித்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுபட்டி கிராமத்தைச் சார்ந்தவர் அருள்பிரகாஷ். இவன் காவல்துறையினரை போல வேடமிட்டு, காவல் துறையினர் போல கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளான். மேலும் இவன் மீது கொலை, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் வழிப்பறி என பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.  

இந்த நிலையில், தற்போது இவன் தனது வாகனத்தில் காவல்துறை என்று ஸ்டிக்கர் ஒட்டி வலம் வந்துள்ளான். மேலும் தமிழக அரசு தற்போது 144 தடை உத்தரவு அமல் படுத்தியுள்ள நிலையில், பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட அருள்ப்ரகாஷ், ஆட்கள் குறைந்தளவு நடமாடும் பகுதி மற்றும் காவல்துறையினர் வராத பகுதிகளில் மக்களை இடைமறித்து வசூல் வேட்டையில் இறங்கியுள்ளான். 

இந்த பெருமாள்பட்டிக்கு அருகே இருக்கும் வெள்ளூர் கிராமத்தைச் சார்ந்த சுரேஷ் கண்ணன் என்பவர் இப்பகுதி வழியாக சென்ற நிலையில், விதி மீறலை ஏற்படுத்துவதாக கூறி ரூ.7,750 பறித்துள்ளான். மேலும், காய்கறி வியாபாரம் செய்ய சென்று வந்த பெண்ணிடமும் ரூ.50 ஆயிரத்தை அபராதமாக விதிக்க போவதாக கூறி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளான். 

மேலும், தன்னை மதகுபட்டியில் உள்ள காவல் நிலையத்தில் வந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்ததில், இப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதன்பின்னர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் போலி காவல் அதிகாரியை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது. 

இவனது வாகனத்தின் எண்ணை பாதிக்கப்பட்ட நபர்கள் தெளிவாக கூறவே, காவல்துறையினர் அருண்பிரகாஷ் கைது செய்துள்ளனர். இவனை கைது செய்ய முற்படும்போது தப்பிக்க முயன்ற அருண்பிரகாஷ் வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளான். இவனது இடது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து, இவனை சிவகங்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இவனின் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai fraud culprit arrested by police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->