நோய்க்கிருமிகளை விரட்டும் மூலிகை ஏர்கூலர்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியை சார்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி முத்துகுமரேசன். இவரது மகன் மதுரை செல்வன். இவர் கனடா நாட்டில் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளராக இருந்து வந்துள்ளார். 

இவர் தற்போது காரைக்குடியில் உள்ள சிக்ரி பகுதியில் பணியாற்றி வரும் தனது மாமா மற்றும் விஞ்ஞானி பழனியப்பன் என்பவரது ஆலோசனையின் பேரில் மூலிகை குளிர்பதன பெட்டியை கண்டறிந்துள்ளார்.

இந்த குளிரூட்டி வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்விசிறியை கொண்டும், மண்பாண்டத்தை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மண்பானையின் பக்கவாட்டு பகுதியில் வட்ட வடிவிலான துவாரத்தை ஏற்படுத்தி, இதன் மேல் பகுதியில் சிறிய மண்சட்டியை உள்புறத்தில் சிறிய அளவிலான துவாரமிட்டு வைத்துள்ளனர்.

மண்சட்டியில் வெட்டிவேர், துளசி, வேப்பிலை. மஞ்சள் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வாய்த்த மூலிகை சாறை 3 லிட்டர் எடுத்து மண்பானையில் ஊற்றி மின்விசிறியை இயக்கினால் தூரல் மழை போன்ற குளுமையான காற்றை நாம் பெறலாம்.

இந்த மூலிகை காற்று நமது உடலின் மீது படும் சமயத்தில், கொரோனா தொற்று மற்றும் பிற நோய்த்தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும் என்றும், இந்த ஏர் கூலரை நாளொன்றுக்கு 8 மணிநேரம் பயன்படுத்தலாம் என்றும், இந்த மூலிகை நீரை 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மூலிகை காற்றானது நமது உடலில் படும்போது கொரோனா மற்றும் தொற்று, கிருமிகள் பாதிப்பு தடுக்கப்படும். இதனால் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கலாம். இவற்றை தயாரிப்பது மிகவும் சுலபம். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஏர்கூலரை தினந்தோறும் 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga youngster discover Herbal Air Cooler


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->