படித்துறை பாண்டி பாணியில் சிவகங்கை செல்வபாண்டி.. உரிமையாளர்களுக்கு பட்டை நாமம்..!!! - Seithipunal
Seithipunal


தெரிந்தவர் போல பேசி பல்வேறு மளிகை கடைகளில் அரிசி மூட்டைகளை இலாவகமாக திருடிய கொள்ளையன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடிகர் கிரண் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில், அரிசிக்கு சாம்பிள் வாங்குவது போல அரிசி கடையை கொள்ளையடிக்கும் நகைச்சுவை காட்சிகள் இருக்கும். அந்த காட்சிகளை போல நெருங்கியவர் போல பேசி அரிசியை வாங்கி, தேவை போக மீதியை வெளிசந்தையில் பாதி விலைக்கு விற்பனை செய்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசி கடைகளுக்கு டிப்டாப்பாக வரும் மர்ம ஆசாமி, தன்னை செல்வாக்கு கொண்ட நபர் போல காட்டிக்கொண்டு அரிசி மூட்டைகளின் விலையை விசாரித்து, தனது பெருமையை பேசி கடைக்காரரின் மூளையை சலவை செய்து பணம் எடுத்து வருவதாக கூறி அரிசி மூட்டையை எடுத்துச் சென்றது தொடர்பான புகார் காவல் துறையினருக்கு கிடைத்தது. 

சுமார் 10 க்கும் மேற்பட்ட அரிசி கடைகளில் இருந்து இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது. இதனைப்போல, மளிகைக்கடைகளிலும் ஆயிரக்கணக்கான மதிப்பு கொண்ட மளிகை பொருட்கள் நூதன முறையில் வாங்கி செல்லப்பட்டு மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன் ரகுவின் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர் டிப்டாப் ஆசாமி கைவரிசை காட்டாத கடைகள் மற்றும் மளிகை கடைகள் பட்டியலிட்டு, அங்கு சென்று விஷயத்தைக் கூறி அறிவுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஒரு கடைக்கு வந்த மர்ம ஆசாமி தனது பெருமையை கூறி அரிசியை மறுநாள் வந்து வாங்கிக்கொள்வதாக பேசியிருந்த தகவல் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் குறிப்பிட்ட கடையில் காவல்துறையினர் சாதாரண உடையில் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர். 

இந்நிலையில், காவல் ஆய்வாளரின் பாட்டி காலமான தகவல் வந்ததும், அவர் கொள்ளையனை கைது செய்தும் முனைப்பில் இருந்துள்ளார். அவரது எண்ணப்படியே அரிசி கடைக்கு வந்த கொள்ளையன், அரிசி மூடையை எடுத்து செல்ல முயன்ற போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டான். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், அவன் மேலவளவு கிராமத்தைச் சார்ந்த செல்வபாண்டி என்பதும், ஊரடங்கால் வேலை இழந்து தவித்த நிலையில் கடை கடையாக சென்று பேசி கொள்ளையடித்தும் தெரியவந்தது. 

இதுமட்டுமல்லாது, தனது வீட்டின் தேவை போக உள்ள மீதமுள்ள பொருட்களை பாதி விலைக்கு கடைகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவனது வீட்டில் நடத்திய சோதனையில் 10 மூட்டை அரிசி, 20 லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Man Using Movie technic to Robbery Rice and cooking Items Purchasing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->