சிவகங்கை மாவட்டத்தை அதிரவைத்த இரட்டைக்கொலை, கொள்ளை வழக்கு விவகாரம்.. குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் முடுக்கூரணி கிராமத்தை சார்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது மனைவி ராஜகுமாரி (வயது 60). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் (வயது 38) இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி மற்றும் 7 மாத பெண் குழந்தை இருக்கின்றனர். 

ஸ்டீபன் இராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், சினேகா தனது குழந்தையுடன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் 14 ஆம் தேதி, ராஜகுமாரி மற்றும் அவரது மருமகள் சினேகா, 7 மாத குழந்தை வீட்டில் உறங்கியுள்ளனர்.

இதன்போது, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல் ராஜகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளது. அங்கிருந்த சிநேகாவையும் சுத்தியலால் தாக்கி கொலை செய்த நிலையில், குழந்தையை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

தீரன் திரைப்பட பாணியில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகிய நிலையில், காளையார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தேர்தல் பணிகளை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதன்போது, காளையார்கோவில் அருகே நடந்த சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். 

அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பட்டுக்கோட்டை ஆற்றங்கரை பகுதியை சார்ந்த முத்து முருகன் (வயது 42) என்பது தெரியவந்துள்ளது. மேலும், முத்துக்கூறணி பகுதியில் நடைபெற்ற கொலை, கொள்ளையை நடத்தியது இவனும், இவனது கூட்டாளிகளும் என்பது உறுதியானது. இதனையடுத்து முத்து முருகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இவனது வாக்குமூலத்தின் படி, தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனைப்புதூர் பகுதியை சார்ந்த செல்லமுத்து (வயது 26), தூத்துக்குடி பூச்சி கணேசன் (வயது 26), காளையார்கோவில் வேணுகோபால் (வயது 46), இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராஜகோபால் கிருஷ்ணன் (வயது 33), முகேஷ் ராஜா (வயது 33) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 

இந்த வழக்கில் கைதாகிய வேணுகோபாலின் தம்பி ராஜசேகர் ஏற்கனவே கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதமாக தொடர் திருட்டில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது கைதாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Kalayarkoil Twice Murder and Robbery Case Police Arrest Culprits 27 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->