21 குண்டுகள் முழங்க சிவச்சந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!! உறவினர்கள் கதறல்!!  - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 41 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்றும் மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விரவாதிகளின் கொடூர தாக்குதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. வீரர் சிவசந்திரனின் உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, சிவச்சந்திரனின் உடல் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதற்கு தமிழிசை, நிர்மலா சீதாராமன் ர்மலா, தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

ராணுவ உடையில் சிவச்சந்திரனின் உடலுக்கு அவருடைய மகன் அஞ்சலி செலுத்தினான். அரசு அறிவித்த கருணை உதவி காசோலை ரூ.20 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

மாலை சுமார் 5.10 மணியளவில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #CRPFAttack #SivaChandran 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivachandran body funerary in ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->