கண்ணீர் விட்டு கதறி அழுது எஸ்.ஐ வில்சன் மனைவி வெளியிட்ட ஆதங்கம்.! - Seithipunal
Seithipunal


தனக்கு நடைபெற்ற கொடுமை வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது என களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் துணை ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத் தொகைக்கான காசோலையை  வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து இன்று வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக முதல்வருடனான சந்திப்புக்கு பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போதும் தனக்கு நடைபெற்ற இந்த கொடுமை இனி யாருக்கும் நடைபெறக்கூடாது என கலங்கியபடி பேசினார்.

மேலும், எனது மூத்த மகளின் கல்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்து உள்ளார். எனது இளைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே எனது மூத்த மகளுக்கு அரசுப் பணி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது என தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் தமிழக காவல்துறை சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த வாரம் புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் பணியிலிருந்தார், அப்போது அங்குள்ள மார்க்கெட் பகுதியிலிருந்து நடந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் 4 ரவுண்டுகள் சுட்டனர். இதில் 2 தோட்டாக்கள் உதவி ஆய்வாளர் வில்சனின் உடலில் பாய்ந்துள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

si wilson wife cry for his situation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->