செங்கோட்டை பெண் போராட்ட விவகாரம்.. போலீசார் மீது பி.சி.ஆர் போட நாடகம்.! ரவுடி தந்தைக்கு, ரவுடி மகள் ஆதரவு..! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை புளியாரை தாட்கோ நகர் பகுதியை சார்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புளியரை காவல் சோதனை சாவடியில் அரிசி கடத்தி சிக்கிக்கொண்ட நிலையில், அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், தனது தந்தையை காவல் துறை அதிகாரிகள் வேண்டும் என்றே தாக்கி வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரான்சிஸ் அந்தோணியின் இரண்டாவது மகள் அபிதா (வயது 22), செங்கோட்டை அரசு மருத்துவமனை செல்போன் கோபுரம், அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி என்று உயரமான இடங்களில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் முருகேசன், ஏட்டு மஜித் மற்றும் ஒரு காவலர் என 3 பேரின் மீது புளியரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் அபிதா போராட்டத்தை கைவிட்ட நிலையில், நேற்று மாலை தனது வீட்டின் மேற்கூரை மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், தந்தையை தாக்கிய காவலர்கள் மீது ஜாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் (எஸ்.சி., எஸ்.டி) உட்பட பிற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். 

அபிதாவின் போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த பலரும், சர்ச்சைக்குரிய வகையில் வழக்குப்பதிவு செய்ய கூறியதால் தங்களின் ஆதரவை கைவிட்டனர். மேலும், காவல் துறையினரின் விசாரணையில் அந்தோணி மீது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, அரிசி கடத்துவது என பல வழக்குகள் ஏற்கனவே பதிவாகி இருந்ததும் உறுதியானது. மேலும், அபிதாவின் மீது மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த வழக்கும் உள்ளது. 

இவர்கள் பிறரின் தூண்டுதல் அல்லது தனிப்பட்ட காரணத்திற்காக வேண்டும் என்றே வெட்டி விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தியது உறுதியான நிலையில், ஊர் மானம் போவதாக ஊர் மக்கள் ஒருபுறம் போராட்டத்தில் குதிக்க தொடங்கினர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

மேலும், கடந்த 2 நாட்களாக உடலில் பெருங்காயம் என்று கூறி மருத்துவமனையில் வெட்டியாக படுத்து உறங்கிய அந்தோணி, இன்று வீட்டிற்கு வந்து தடபுடலாக ஊர் மக்களை ஆபாசமாக பேசி, நான் இந்த ஜாதிக்காரன் டா., என் மேலே கேஸ் போட்டா விட்டுடுவேனா?. உங்களையே உள்ளே தூக்கி வைக்க வச்சிருவேண்டா என வீராப்பு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shengottai Puliyarai Woman Protest Issue Fake PCR Complaint Registration Move Failure 25 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->