தமிழகத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி இந்த மாவட்டத்தில் மட்டும் மதுக்கடைகள் மூடல்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இம்மானுவேல் சேகரன்  செப்டம்பர் 11, 1957 ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில், இம்மானுவேல் சேகரன்  நினைவு நாளான செப்டம்பர் 11, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், விடுதியுடன் கூடிய மதுபான அருந்தகங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரரின் நினைவு தினத்தின் முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 11 tasmac closed in madurai district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->