அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல்!! திமுக வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. காலியாக உள்ள சட்டமன்றங்களில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது

இதனையடுத்து இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கிடையே சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் கலியாகியது. இந்த நிலையில், காலியாக உள்ள இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இதற்காக செந்தில் பாலாஜி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

வேட்பு மனு தாக்கலின் போது, திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthilbalaji nomination in aravakurichi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->