வற்றாமல் விழும் நீர்... பச்சைப் பசேல்.. குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்.! - Seithipunal
Seithipunal


நல்ல இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கழிப்பதற்கு, தமிழகத்தில் ஏராளமான இடங்கள் உண்டு. அதில் ஒன்று, விருதுநகரில் இருக்கும் செண்பகத் தோப்பு.

செண்பகத் தோப்பு விருதுநகர் மாவட்டத்திலிருந்து 55கி.மீ தொலைவிலும், திருவில்லிபுத்தூரிலிருந்து 45கி.மீ தொலைவிலும் உள்ளது.

சிறப்புகள் :

துள்ளிக் குதித்தோடும் மான்களும், பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அந்த மரங்களையும் காண சில தூரங்கள் பயணப்படுவது மனதிற்கு இதமாக இருக்கும்.

கோவில்பட்டியிலிருந்து பயணம் செய்தால், இரண்டு மணி நேரத்தில் மேரு மலையின் இயற்கை எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பைக் காண முடியும். சாம்பல் நிற அணிலின் சரணாலயமாக இருக்கிறது இந்தப் பகுதி.

மலையடிவாரத்தில் இருந்து நடக்கத் தொடங்கினால், அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே சாம்பல் நிற அணில்களைப் பார்க்கமுடியும். 

சிவப்பு மற்றும் கறுப்பு நிற உடலமைப்பும் ரோஸ் நிறத்தில் அழகான மூக்கைக் கொண்ட இந்த அணில்கள், நம் பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும். 

இங்குள்ள ராக்காச்சியம்மன் கோவில், பேச்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. 

கோயில்கள் அருகே ஓடை சலசலத்து செல்கிறது. மேலும் மலையின் மேல் 5 கிலோ மீட்டர் தொலைவு ஏறிச் சென்றால், காட்டழகர் கோவில் உள்ளது. 

இங்குள்ள நூபுர கங்கையில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் விழும். இது மூலிகை ஆற்றல் மிக்க துர்த்தம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதில் குளிக்கத் தவறுவதில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senpaka thoppu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->