வெளியாகப்போகும் அறிவிப்பு.. காணாமல் போகப் போகும் திமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் அனைத்தும் மும்முரம் காட்டி வருகின்றனர். 

அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில், பாமகவிற்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 4 நாட்கள் கிடைத்திருந்தால் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருப்போம்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வந்தாலே திமுக காணாமல் போகும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்  வழங்கியதில் திமுகவை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sengottaiyan says about admk election statement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->