செய்யாறில் பேருந்தில் கொலை செய்யப்பட்ட நபரின் வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் மடம் தெரு பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக செய்யாறு வேல் சோமசுந்தரம் நகரில் குடும்பத்தோடு வசித்து வந்தார். 

இந்த நிலையில்., நேற்று காலையின் போது., திருமண தடை நீங்குவதற்காக கோவிலுக்கு சென்று வழிபட்டு., செய்யாறு நகர் பகுதியில் இருக்கும் காஞ்சிபுரம் சாலையில் இருக்கும் திரையரங்கிற்கு முன்னதாக தேநீர் குடித்துக்கொண்டு இருந்தார். 

இந்த தருணத்தில்., அங்கு காரில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பலானது சதீஷை பயங்கரமாக தாக்கவே., அங்கு வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்தில் ஏறினார். இவரை விடாது துரத்திய கும்பலானது., சதீஷை இருக்கையில் வைத்தே கொலை செய்து., காரிலேயே தப்பி சென்றது. 

crime, கிரைம், குற்றம்,

இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில்., சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்து., அதில் பதிவாகியுள்ள காரின் எண்ணை அறிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தருணத்தில்., கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார்., காஞ்சிபுரம் பிரபல ரவுடியான ஸ்ரீதரின் கூட்டாளியாக இருந்தது தெரியவந்துள்ளது. 

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர், kachipuram rowdy sridhar,

இதனையடுத்து., ஸ்ரீதரின் மறைவிற்கு பின்னர்., இவருடன் நெருக்கமாக இருந்த தினேஷ் மற்றும் தணிகா இருவரும் தனித்தனியாக பிரித்து செயல்பட்டதை அடுத்து., இவர்களுக்குள் யார் பெரியவர்? என்ற கருத்துடன் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த தருணத்தில்., தினேஷின் கோஷ்டியில் சதீஷ் இருந்த சமயத்தில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தணிகாவின் கோஷ்டியை சார்ந்த சிவாவை கொலை செய்ய முயற்சியும் அரங்கேறியுள்ளது. 

இந்த முயற்சியானது தோல்வியை தழுவிய நிலையில்., கொலை செய்ய திட்டம் தீட்டிய நபர்கள் குறித்து தணிகாவின் கோஷ்டி விசாரித்ததில் சதீஷ்குமார் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பழிக்கு பலி வாங்கும் நோக்கத்தோடு கொலை திட்டம் அரங்கேறியதும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில்., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seiyar murder case police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->