மத்திய அரசு, மாநில அரசை டோட்டல் டேமேஜ் செய்த சீமான்.. பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழ் மொழியில் கடிதம் அனுபவத்தில் என்ன சிக்கல் இருக்க போகிறது?.. உங்களுக்கு அலட்சியமும், அதிகாரத்துவமும் அதிகரித்து இருக்கிறது. பிகாரில் ஹிந்தி மொழியில் உள்ள பதாகையை உடைத்தால் தேசிய பிரச்சனை என்று கூறுகிறார்கள். இதுவே நாங்கள் செய்தால் சமூக விரோதி என்று கூறுகிறீர்கள். அது போன்ற சூழலை இங்கு ஏற்படுத்தி விடாதீர்கள். 

மேகதாது விவகாரத்தில் பெரும் அரசியல் இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும். என்னுடன் வந்து காவேரி பிரச்சனைக்கு தமிழக பாஜக போராடுமா? போராடாது. நீட் தேர்வு விவகாரத்தில் வேறு வழியே இல்லாமல் நமது பிள்ளைகள் தேர்வுகளை எழுதுகின்றனர். 

தமிழகத்தில் மட்டுமே 24 மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது. இங்கு 100 மாணவர்கள் மட்டுமே தமிழர்களாக இருக்கின்றனர். வடஇந்தியாவில் இருந்து வந்து மருத்துவம் படித்து, இங்குள்ள மக்களுக்கு அவர்கள் எப்படி வைத்தியம் பார்ப்பார்கள். என்னிடம் இருந்து வரியை மட்டும் மத்திய அரசு பெற்றுக்கொள்கிறது. பிற மாநிலங்களில் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால், நாம் ஏற்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

தமிழகத்தில் தமிழகத்திற்கு தேவையற்றதை எதிர்க்க உறுதியான ஆளுமை இல்லை. என் பிள்ளைகளுக்கு தகுதியை நான் தேர்வு செய்துகொள்கிறேன் என்று முதல்வர் கூற வேண்டும். நீட் விவகாரத்தில் சூர்யாவை வருமான வரி சோதனை பிரச்சனையை ஏற்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகின்றனர். பிற மாநிலங்களில் எதனை ஏற்றாலும், நமக்கு தேவையானது மட்டுமே நம்மால் ஏற்றுக்கொள்ள இயலும். 

எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்றால் நாம் இறந்துவிடுவோமா?. எல்லாரும் நிர்வாணமாக இருந்தாலும், நாமும் நிர்வாணமாக மாற வேண்டுமா?. எல்லோரும் பைத்தியம் என்றால் நாமும் பைத்தியமா?.. சூர்யாவின் அகரம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கனவு இருக்க கூடாதா?.. தமிழர்களுக்கு மருத்துவர்களாக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்காதா?.. சூர்யாவின் கருத்து நியாயமானது. 

நீட் விவகாரத்தில் மாநிலமே கொந்தளித்து விலக்கு பெற வேண்டும். பல போராட்டங்களுக்கு நாம் உயிரை கொடுத்தே பழக்கப்பட்டுவிட்டோம். இவர்கள் நமது மரணத்தை ரசித்து, ருசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி மனித குல எதிரி. பாஜகவினரிடம் மக்களின் துயரத்தை கூறினால், அது அவரது விதி என்று அவர்கள் கூறுவார்கள். மாணவர்களே பெற்றோர்களின் கனவு பலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இறந்து யாரும் போராட வேண்டாம். இருந்து போராடுங்கள். 

வடஇந்தியாவில் ஒரு மாணவியோ/ மாணவனோ இறந்திருந்தால் என்னென்ன அனுதாப பதிவு வந்திருக்கும். எங்களுக்கும் சேர்த்துதான் மோடி பிரதமராக இருக்கிறார். இத்துணை பிள்ளைகள் இறந்துள்ளனர். அவருக்கு இரங்கல் தெரிவிக்க கூட நேரம் இல்லையா " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Angry Press Meet 16 September 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->