பள்ளி மாணவியிடம் அத்து மீறிய ஆசிரியர்கள், மாணவர்கள் விவகாரத்தில் அதிரடியாக காவல்துறை..! வெளியான தகவல்..!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்து உள்ள குன்றத்தூரைச் சேர்ந்த ப்ளஸ் 1 மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசியதாக அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்ததோடு விசாரித்து வருகிறார்கள்.

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 பயின்று வந்த மாணவி ஒருவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அரசு மடிக் கணினி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. அந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளியில் சென்று கேட்டும் இதற்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், கல்வித் துறை அதிகாரிகளிடம் அந்த மாணவி அளித்த புகாரை அடுத்து அவருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. ஆனால் அந்த மாணவி புகார் கொடுத்ததால், அவரை அவரது பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து ஆபாசமாக திட்டியதால் மாணவி பள்ளி செல்ல மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ந்த அவரது தாய் போலீஸ் கமிஷனரிடத்தில் புகார் அளித்ததன் பேரில், மாணவியிடம் ஆபாச வார்த்தைகளை பேசிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Girl Harassment By Teacher And Students


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->