#BigBreaking | தமிழகத்தில் 5 முதல் 12 வகுப்புவரை காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை  காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிவிப்பில், 06/10/2022 , 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

தொடக்கப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 , 11 , 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி நடக்க உள்ளதால், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Exam Leave Change Oct 2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->