தமிழக அரசு பள்ளியின் மேற்கூரை சாரம் விழுந்து, இரு இளம்பிஞ்சுகளின் மண்டை உடைந்து படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சாயல்குடி அருகே அரசு பள்ளியில் மேற்கூரையின் மரக்கட்டை இடிந்து விழுந்து, இரண்டு மாணவர்களின் மண்டை உடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த வாழைகுளம் கிராமத்தில் தமிழக அரசு தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளியின் உள்ளே மாணவர்கள் அமர்ந்து கொண்டிருக்கும் போது, பள்ளியின் ஓட்டு கட்டிடத்தின் மேல் இருந்த மரக்கட்டை ஒன்று திடீரென்று மாணவர்களின் தலையில் விழுந்தது.

இதில், நான்காம் வகுப்பு படிக்க கூடிய மாணவி வைஷ்ணவி, இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் அகிலேஷ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. 

இதனையடுத்து, மாணவ மாணவிகளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தது குறித்து ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று 2 பள்ளி மாணவர்கள் காயமுற்று உள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sayalkudi school building accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->