பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்தது. அங்கு அன்பின்நகரம், ஏழாயிரம் பண்ணை, படந்தால், மேட்டுப்பட்டி, மார்க்கநாதபுரம், அச்சன்குளம், சல்வார்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலை செய்து வந்தனர். 

நேற்று 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அந்த பட்டாசு ஆலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் பலர் பலியானார்கள். அத்துடன் 20க்கும் மேற்பட்ட காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இதைத்தொடர்ந்து வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 லட்சம் 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சத்தை நிர்வாணமாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து தனிப்படையினர் உரிமையாளர்கள் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sattur firecracker factory accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->