சசிகலா விடுதலை விவகாரம்.. பெங்களூர் சிறை தலைமை அதிகாரிக்கு பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பரபரப்பாக பேசப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 4 வருட சிறை தண்டனை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்டது. இதனையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். இவர்களின் தண்டனை காலமானது வரும் 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவுபெறவுள்ளது. 

இந்த நிலையில், பெங்களூரை சார்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை தொடர்பாக நீதிமன்றத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலாக சசிகலா சிறை நிர்வாகம் அறிவித்துள்ள அபராதத்தை செலுத்தினால் வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதியே சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார். 

அபராதம் செலுத்தாத பட்சத்தில் மேலும் 13 மாதங்கள் அவர் சிறையில் இருப்பார் என்றும், விடுமுறை நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் முக்கூட்டியே விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிறை விதிமுறையின்படி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் சிறை நிர்வாகத்திடம் விடுமுறை நாட்கள் குறித்து கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா கேட்டுக்கொண்ட காரணத்தால், இந்த கேள்விக்கு பதில் அளிக்க இயலாது என்று விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சசிகலா சிறை நிர்வாக தலைமை அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், " எனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் எனது விடுமுறை தொடர்பாக மூன்றாம்கட்ட நபர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல விஷயங்களை பெறுவதாக தெரியவருகிறது. 

இவர்கள் விளம்பரம் மற்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக இதனை மேற்கொள்கின்றனர். சட்டப்படி சரியான நேரத்தில் விடுதலை ஆவதை விரும்பாததால், என்னை மீண்டும் பிரச்சனையில் சிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் எனது தண்டனை மற்றும் விடுதலை தொடர்பான பிற தகவலை, 3 ஆம் கட்ட நபர்களுக்கு வழங்கக்கூடாது " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Writes letter to Bangalore Prison Officer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->