அமமுகவிற்கு செதுக்கப்படும் அடுத்த ஆப்பு.!! சசிகலாவுக்கு நேரும் துயர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 1996 -97 ஆம் ஆண்டு காலையில் சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் பாஸ்கர் இருவரும் ஜெ.ஜெ தொலைக்காட்சிக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில்., அவர்கள் அந்நிய செலாவணி மோசடி செய்திருப்பதாக இருவர் மீதும் புகார் எழுந்தது. 

இது குறித்து அவர்களது மீது அமலாக்கத்துறையினர் 4 வழக்குகளை பதிவு செய்தனர், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது, 

இது குறித்து அமலாக்கத் துறை சிறப்பு தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை முடிந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. 

கடந்த 2011ம் ஆண்டு பாஸ்கரன் மற்றும் சசிகலா ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும்., குற்றச்சாட்டு பதிவிலும் கையெழுத்திடவில்லை. அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் சசிகலாவின் மீது காணொளி மூலமாக குற்றச்சாட்டு பதிவு செய்து உறுதி செய்யப்பட்டது. 

நீதிபதி சசிகலாவை நேரில் ஆஜராக கூறி உத்தரவிட்டார்., இதுகுறித்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது., ஆனால் அதில் சசிகலா ஆஜராக வில்லை. 

இந்நிலையில்., இது குறித்த விசாரணை ஜூலை 16 ம் தேதிக்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி மூலமாக இந்த விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு மேலும் தண்டனை அதிகப்படியாக இருக்கும் அவரது சிறை காலம் அதிகரிக்கப்படும் என தோன்றுகிறது. 

ஏற்கனவே தினகரன் கட்சியினர் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து மன உளைச்சலில் இருக்கின்றனர். இதில் சசிகலாவும் இந்த வழக்கினால் பாதிக்கப்பட்டால்., அவரது கட்சியினருக்கு ஏற்படும் மிகப் பெரும் துயர சம்பவமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala old case about JJ television case investigation started


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->