ரஜினி, கமலுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது!. கேப்டன் விஜயகாந்துடன் மட்டுமே கூட்டணி!. பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு!. - Seithipunal
Seithipunalவிஜயகாந்த் விரும்பினால் அவரது தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவரும், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து இரட்டைஇலை சின்னத்தில் நின்று தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார், தற்போது விஜயகாந்துடன் கூட்டணி வைக்க விருப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.


சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் " சகோதரர் விஜயகாந்த் விருப்பப்பட்டால் நான் தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளேன்" மேலும் கட்சி தொண்டர்கள் விருப்பப்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயார். ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் அடுத்த சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் உள்ளது என்று கூறினார்.

சரத்குமார் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் ரஜினி மற்றும் கமலுடன் அவருக்கு கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், எனக்கு திரையுலகில் ஒருசிலர் தான் நண்பர்கள் இருக்கின்றனர். ரஜினி, கமல் இருவரும் என்னுடன் திரையுலகில் பயணம் செய்தவர்களே தவிர நண்பர்கள் இல்லை என கூறினார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarathkumar talk about DMK alliance


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal