3 பேர் கூட்டாக தற்கொலை முயற்சி.. ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தை அதிரவைத்த திருநங்கைகள்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் திருநங்கைகள் நிரஞ்சனா (வயது 24), ரம்யா (வயது 33), பிரகதி (வயது 24). இவர்கள் 3 பேரிடமும், வேறு திருநங்கைகள் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது. 

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்னதாக மூன்று பேரும் தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில், இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர், 3 பேரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, கமிஷினர் அலுவலகத்திற்கு வந்திருந்த திருநங்கைகள், மறைத்து வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மாத்திரைகளை கைப்பற்றி வீசி எறிந்தனர்.  

இதற்குள்ளாகவே மாத்திரையின் வீரியம் காரணமாக திருநங்கைகள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் துணை கமிஷனர் செந்தில் மற்றும் சந்திரசேகரன் திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்கி, பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். 

ஆனால், இந்த விஷயம் தொடர்பாக திருநங்கைகள் தரப்பில் கூறியதாவது, சில திருநங்கைகளால் எங்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீக்குளிக்க முயற்சி செய்தோம். தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தோம். 

காவல் துறையினர் எங்களை காப்பாற்றிவிட்டனர். ஆனால், நாங்கள் வழங்கிய புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். காவல் நிலையங்களுக்கு அலைக்கழித்து அலட்சியப்படுத்துகின்றனர். எங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், நாங்கள் தற்கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Transgender Suicide attempt Police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->