மாணவி தந்தையுடன் வந்து, எனது தந்தை கூலித்தொழிலாளி., - தமிழக முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


சேலம் வீரபாண்டி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " 

ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஒரு மாணவி தனது தந்தையுடன் என்னை வந்து சந்தித்தார். அழுதுகொண்டே அவர் தெரிவித்தார், " எனது தந்தை கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

அவர் பணியாற்றி கொண்டுவரும் தொகை எங்களின் குடும்ப செலவிற்கே சரியாகிவிடும். இதை வைத்து நாங்கள் மருத்துவராக முடியாது " என்று தெரிவித்தார். இதனையடுத்து, நான் சிந்தித்து பார்த்தேன். மருத்துவ மாணவ - மாணவிகளின் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிப்பு வெளியிட்டேன். 

இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ - மாணவிகள் மருத்துவர்களாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் இதனை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem TNCM Edappadi Palanisamy Election Campaign 2 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->