காவாயை திறந்துவிட்டதுபோல கானா பாடி, கம்பிக்குள் குந்திகின்ன பிலிப்ஸ்.. காவல்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


காவல்துறையினருக்கு சவால் விடுத்து கானா பாடல் பாடி பிறந்த நாள் கொண்டாடிய சேலம் ரவுடி அசாருதீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியை சார்ந்தவன் அசாருதீன். இவன் மீது பாலியல் பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது. சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அழகுநிலையத்திற்குள் புகுந்து அசாருதீன் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டான். 

இதன் பின்னர், இவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறையில் காவல்துறையினரின் சிறப்பான கவனிப்பால் வெளியே வந்தவன் நவதுவாரங்களையும் மூடிவைத்து அமைதியாக இருந்தான். இந்நிலையில், குரங்குபோல மரம் தாவ ஆசைப்பட்டு, மீண்டும் தன் தரப்பு சுண்டைக்காய் சுள்ளான்களை ஒருங்கிணைத்து ரவுடி கோஷ்டியை உருவாக்கி கட்டப்பஞ்சாயத்து ஈடுபடத் தொடங்கி இருக்கிறான்.

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவனின் அட்டூழியம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அசாருதீனின் பிறந்தநாள் காட்டுப்பகுதியில் மறைமுகமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவனது தலைமையில் அணி திரண்டு வந்த சுள்ளான் ரவுடிகள், ஆள் உயர மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். 

இதன்போது தங்களைப் பெரிய ரவுடிகள் என்று பாவித்துக் கொள்ளும் சுண்டைக்காய் பாய்ஸ், கானா பாட்டு பாடி ஆட்டம் ஆடி அஸாருதீனை உற்சாகப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர், கேக் வெட்டி பிறந்த நாள் விழா சிறப்பு செய்யப்பட்ட நிலையில், அஸாருதீனை எதிர்த்தால் தலையை வெட்டி கையில் பிடித்துக் கொள்வோம். காவல்துறையினர் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பாடல் பாடப்பட்டுள்ளது. 

இந்த பாடல் வீடியோ வாட்சாப்பில் வெளியாகி வைரலான நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமாருக்கு இது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் அனைவரையும் பிடிக்க உத்தரவிட்ட நிலையில், வீராணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் இன்று காலை அஸாருதீனை கைது செய்துள்ளனர். மேலும், கானா பாடலை பாடியவர்கள், பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் என மொத்த கோஷ்டியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Rowdy Arrest by Police Investigation 10 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->