பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பில் முறைகேடு - சேலத்தில் 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள சேலம் நான்கு ரோடு பகுதியில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யும் முறைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். 

விசாரணையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதில் முறைகேடு நடந்தது உறுதியாகவே, குடிசை மாற்று வாரிய அலுவலக செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், ஜெயந்திமாலா மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரூ.35 இலட்சம் அளவில் பயனாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் ஆலங்காயம் அருகே நடைபெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவமும் நடந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Prime Minister House Scheme Forgery Bribery Eradication Team File FIR 22 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->