அரிசி கடத்தலில் தொடங்கி, நண்பனால் கொடூர கொலை.. சேலம் பரபரப்பு சம்பவத்தின் பின்னணி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள கீச்சிப்பாளையம் சுந்தரர் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர், நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி வந்தார். மேலும், அக்கட்சியின் சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார். 

இவரின் மீது ஒரு கொலை, 3 கொலை முயற்சி, ரேஷன் அரிசி கடத்தல் உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ரவுடியாகவும் அப்பகுதியில் வலம் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அடிதடி வழக்கு ஒன்றில் கிச்சிப்பாளையம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதன் பின்னர் தொடர்ச்சியாக குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், செல்லத்துரை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக தொடுத்த வழக்கின் கீழ், குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியாகியுள்ளார். 

இந்த நிலையில், செல்லத்துரை அவரது இரண்டு மனைவிகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்து வீட்டிலேயே வைத்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் தனது வழக்கறிஞரை சந்திக்க சென்றபோது, இவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் ஒன்று திரைப்பட பாணியில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளது. 6 பேர் கொண்ட கும்பலால் இக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.  

இதனையடுத்து தகவல் அறிந்த கீச்சிபாளையம் காவல் துறையினர், செல்லத்துரையின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அரிசி கடத்தலை காட்டிக் கொடுத்த நண்பர் ஜான் என்பவரை செல்லத்துரை மிரட்டியதால், தனது கூட்டாளிகளுடன் வந்து செல்லத்துரையை ஜான் தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem NTK Supporter Chelladurai Murder due to Rice Smuggling warning by Friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->