திட்டமிட்டு அரங்கேறிய தில்லாலங்கடி திருட்டு.. கம்பெனியில் புகுந்து காவலாளிகளை கட்டிப்போட்டு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் கோட்டகவுண்டன்பட்டி பகுதியில் ஹைடெக் என்ற தனியாருக்கு சொந்தமான இரும்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த தொழிற்சாலை, நிர்வாக பிரச்சனை மற்றும் நஷ்டத்தின் காரணமாக கடந்த ஏழு வருடங்களாக மூடப்பட்டிருந்தது. 

இதனால் தொழிற்சாலை முழுவதும் மரங்கள் வளர்ந்து புதர் மண்டி வனம் போல காட்சி அளித்த நிலையில், கடன் கொடுத்த வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் தொழிற்சாலை நிறுவனம் இருக்கிறது. இங்கு வங்கியின் சார்பில் பாதுகாவலராக காலையில் பதினோரு பேரும், மாலையில் 11 பேரும் என 22 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் 20 பேர் கொண்ட கும்பல், அந்த பகுதிக்கு கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த நிலையில், 11 காவலர்களையும் தனித்தனியாக கட்டிப் போட்டு அறையில் அடைத்துள்ளனர். 

பின்னர் சுமார் 5 மணிநேரமாக மின் சாதனப் பெட்டிகள், மின்மாற்றிகள், மின்கலன்கள் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பியை திருடி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வரவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திட்டமிட்டு 5 மணிநேரம் திருட்டில் ஈடுபட்டுள்ளதால், விஷயம் தெரிந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem KOTTAGOUNDAMPATTI Hitech Company Copper Theft Case 9 November 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->