பெண்களுக்கான இலவச டிக்கெட் கொடுத்து பணவசூல்.. ஆய்வில் அகப்பட்ட நடத்துனர்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை வடமாநிலத்தவருக்கு கொடுத்து கட்டணம் வசூல் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த கோப்புகள் கையெழுத்தான சமயத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தொடங்கினர். 

முதலில் பயணசீட்டுகள் இல்லாமல் பெண்கள் பயணம் செய்து வந்த நிலையில், ஒரு நாளைக்கு எத்தனை பெண்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணம் செய்கிறார்கள் என்ற விபரத்தையும், மொத்தமாக ஒரு நாளில் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுக்க அதற்கான தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சேலம் இரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த வடமாநிலத்தவர்கள் 26 பேரிடம், பேருந்தின் நடத்துனர் நவீன் குமார் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை கொடுத்து கட்டணம் வசூல் செய்துள்ளார். இந்த பேருந்து ஐந்து ரோடு பகுதியில் வருகையில், போக்குவரத்து பயணச்சீட்டு சோதகர்கள் பேருந்தை இடைமறித்து சோதனை செய்துள்ளனர். 

இதன்போது, வடமாநில நபர்களிடம் பெண்களுக்கான பயணச்சீட்டு இருப்பதை கண்டறிந்து உள்ளனர். இதனையடுத்து, மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அரசு பேருந்து நடத்துனர் நவீன் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், பெண்களுக்கான டிக்கெட்டை வைத்து அவர் முறைகேடு செய்தது உறுதியாகவே, நவீன் குமாரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Govt Bus Conductor Forgery Ladies Free ticket to Amount for North Indian Travelers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->