தமிழகத்தில் இதைச் செய்தவர்களின் 'ரேஷன் கார்டுகள் இனி செல்லாது' வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற இருப்பதாக கடந்த மூன்று வார காலமாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட 110 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பதை ஒப்புக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதை நிறுத்தி வைக்கும்படி வேளாண்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது வரை மாவட்ட அளவில் சேர்க்கை நடைபெற்று வந்தது நிறுத்தப்பட்டு இனி மாநில அளவில் பயனாளிகள் சேர்க்கை நடைபெறும் என வேளாண் துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, முறைகேடுகளில் ஈடுபட்ட பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்படுகிறது. அந்தவகையில் இதுவரையில் 32 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதம் இருக்கக்கூடிய தொகையை இன்னும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் திரும்ப பெறப்படும் என்று வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். நாளை(செப்டம்பர் 14) மாலைக்குள் பணத்தை திருப்பி செலுத்தாவிடில் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடாக பணம் பெற்றவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக சேலத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலைக்குள் பணத்தை செலுத்தி உரிய ஆவணம் பெறவேண்டும் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem district collector announcement to district peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->