பேய் பிடிப்பதிருப்பதாக கூறி, பச்சிளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த காமுக கொடூரன்.. சேலத்தில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பொன்னரம்பட்டி பகுதியை சார்ந்த தம்பதி, சேலத்தில் உள்ள இரும்பு உருக்காலைக்கு அடுத்துள்ள சுக்காம்பட்டி விவசாய தோட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிகள் இருவருக்கும் 15 வயதுடைய மற்றும் 13 வயதுடைய மகள்கள் உள்ளனர். தற்போது பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக திறக்கப்படாததால், பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இரண்டு சிறுமிகளும் மனநோய்க்கு உள்ளாகியவர்கள் போல இருந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர்கள் பல்வேறு சாமியார்களிடம் பேய் விரட்ட அழைத்து சென்றும் பலனில்லாத நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் மந்திரவாதி சேகர் (வயது 50) என்பவன், கடந்த மாதம் சிறுமிகளுக்கு பேய் விரட்டுவதாக அழைத்து சென்றுள்ளான். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பேய் விரட்ட வேண்டும் என்பதால், சிறுமிகள் அங்கு தங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

இதனை நம்பிய பெற்றோரும் சிறுமிகளை சேகர் வீட்டில் தங்க வைத்து சென்ற நிலையில், சிறுமிகளை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனை வெளியே கூறினால் தலை வெடித்து உயிரிழப்பீர்கள் என்றும், உங்களின் பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் சிறுமிகள் பயத்தால் எதையும் கூறாமல் இருந்து வந்த நிலையில், காமுகனின் கொடூர செயலை பொறுக்க இயலாது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அங்குள்ள மங்களபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், பேய் விரட்டுவதாக கூறி சிறுமிகளுக்கு பல நாட்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்தது உறுதியானது. இதனையடுத்து போலி மந்திரவாதி சேகரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Culprit sexual abuse child girls police investigation and arrest culprit


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal