அம்மாவின் ஆசியோடு, பாலத்தை திறப்பதில் பெருமிதம்.. முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்துவைத்தார். இதற்கு பின் பேசிய தமிழக முதல்வர், இன்று சேலம் மாநகரின் நீண்ட நாட்கள் கனவை நிறைவேற்றியுள்ளேன். மக்களின் துணையுடன் மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த சமயத்தில், சேலம் மாநகர மக்கள் மிகுந்த போக்குவரத்து நெரிசலால் தவித்து வந்தனர். இதற்கு மாற்றாக பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இது ஐந்து ரோடு ஈரடுக்கு மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கையில், இதற்கான நிதியை வழங்கி பணிகளை துவக்கினார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாலத்திற்கு புரட்சி தலைவி ஜெயலலிதா பாலம் என்று பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். ஏ.வி.ஆர். ரவுண்டானா பாலத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சந்தம்பட்டி, வாய்க்கப்பட்டி, மகிழன் சாவடி, அரியனூர் பகுதியில் உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முத்தநாயக்கன்பட்டி, கொலைச்சம்பட்டி, ஏ.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்குரிய சாலையில் இரயில்வே பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் எளிய முறையில் பயணம் செய்யும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புற பகுதிகளில் நதி மற்றும் கால்வாய் பகுதிகளில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.441 கோடி செலவில், 7.82 கிமீ தூரத்தில் இப்பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது என்று கூறினார்.. பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர், கொரோனா விவகாரத்தில் இறப்புகளை மறைக்க எந்த விஷயமும் இல்லை. உங்களுக்கு உண்மையுடன் வெளிப்படையாக அறிவித்து வருகிறோம். 

6 இலட்சத்திற்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு கொரோனா பரிசோதனை செய்த மாநிலத்தில், தமிழகம் தான் முதல் இடம் ஆகும். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு பல வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டு, பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே இறப்பு விழுக்காடு தமிழகத்தில் மட்டுமே குறைவு என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Bridge opened by Tamilnadu CM Edappadi Palanisamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->