சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது.! விருது பெறும் தமிழகத்தின் 4வது பெண் எழுத்தாளர்.! - Seithipunal
Seithipunal


தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலை இலக்கியங்களின் சிறப்பான படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் வருடந்தோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி  விருது  வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின்  தமிழில் சிறந்த நாவலாக `சூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை எழுதிய சோ.தர்மன் சாகித்ய அகாடமி  விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 

இந்நிலையில்  மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது  சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய நாவலை மொழி பெயர்த்ததற்காக இந்த விருதை கே.வி.ஜெயஶ்ரீக்கு வழங்கப்படவுள்ளது. `நிலம் பூத்து மலர்ந்த நாள்  நாவல் கேரளாவில் கொண்டாடப்பட்டது. இது  பல பல்கலைக்கழகங்களிலும் பாடமாகியது. 

இதை எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீ செம்மையான முரையில் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துச் சிறப்பித்திருந்தார். வம்சி பதிப்பகத்தில் வெளியான இந்த நாவலுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

கே.வி.ஜெயஶ்ரீக்கு சாகித்ய அகாடமி விருதுடன்  50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருது விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் 4வது பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sahitya akademi award for jayasree


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->