இடி, மின்னலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் பாதுகாப்பு வழிமுறைகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இடிமின்னல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு அவசியமானது. 

காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மழை மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது தான் வானத்தில் மின்சாரம் உண்டாகி அது பூமியில் பாயும் போது இடி- மின்னல் ஏற்படுகிறது. 

இடி மற்றும் மின்னல் ஒரே சமயத்தில் ஏற்பட்டாலும் ஒளியின் வேகத்தால் மின்னல் முதலில் நம் கண்களுக்கு தெரியாது. ஒரு சில நொடிகள் கழித்து தான் பூமியில் பாயும் இடியோசையே நமக்கு கேட்கும்.

மின்னலின் போது வெளிப்படும் மின்சரமானது பூமிக்குள் பாயும் போது அது மரத்தையோ அல்லது நிலத்தையோ தாக்கவல்லது என்பதால் இடி மின்னல் பூமியை தாக்கும் போது மரத்துக்கு அடியில் ஒதுங்க கூடாது என்று எச்சரிக்கிறார்கள். 

மேலும், உயரமான கட்டிடங்களில் இடிதாக்கி கருவி பொருத்தப்படுவதால் வானத்தில் இருந்து வரும் இடியானது பூமிக்கடியில் சென்று விடுகிறது.

சில சமயத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வீட்டில் இல்லாமல் நாம் வெளியில் இருக்கும் போது, வானத்தில் இருந்து வரும் இடி மின்னல் வெட்டும் சமயத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு சில வழிமுறைகளை காண்போம்.

வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நிற்காமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அப்படி இல்லையெனில் குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். 

தப்பி தவறி கூட மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமான மரத்திலிருந்து தள்ளி நிற்கவும்

மேலும், கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களின் ஓரம் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே சென்று பாதுகாப்பாக இருங்கள்.

கார் போன்ற உள்ளிட்ட வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளே இருப்பது மிகவும் பாதுகாப்பானது.

இடி மின்னலுக்கு பயந்து வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும். 

வடகிழக்கு பருவமழை தொடங்கி தவீரமடைய உள்ளதால் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது நம் பாதுகாப்புக்கு அவசியமானது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

safe in rain season


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->