எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு :  நள்ளிரவில் குற்றவாளிகளை அழைத்து சென்ற காவல்துறை..!   - Seithipunal
Seithipunal


மிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த எட்டாம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக காவல்துறையினர் அடுத்தடுத்து பலரையும் கைது செய்து வருகின்றார். முதலில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகள் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 

இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்ற நிலையில், இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது தொடர்பாகவும் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் இவர்களுக்கு சிம்கார்டு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அங்கு இருக்கும் கடைகளில், போலி முகவரி மூலம் பயங்கரவாதிகளுக்கு ஏராளமான சிம் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அந்த கடையில் மூன்று உரிமையாளர்கள், கடையில் பணியாற்றும் ஊழியர்களின் விசாரணைக்கு சென்னை அழைத்து வரப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே சிம்கார்டு சப்ளை செய்திருந்த பெங்களூருவை சேர்ந்த மூன்று பேர் மற்றும் காஞ்சிபுரத்தைச் சார்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தைச் சார்ந்த அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகாமைக்கு (N I A) மாற்றப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம் என்பதால் வில்சன் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளுமே விரைவில் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு இவர்கள் தங்கியிருந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், அவர்கள் இருந்த இடம், தவ்பீக்கின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வில்சனை கொலை செய்த ஆயுதங்கள் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் அதனைக் கைப்பற்றவும் போலீசார் முனைப்புக் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

s i vilson murder case investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->