ரஷ்யாவில் பணக்காரர்.. இந்தியாவில் சிவபக்தர்... பர்ஸை பறிகொடுத்து பட்டினியால் பரிதவித்த சோகம்.. கைகொடுத்த சென்னை.!! - Seithipunal
Seithipunal


ரஷ்ய நாட்டை சொந்த நாடாக கொன்ற நபரின் பெயர் ருஸ்லான். இவர் தீவிரமான சிவ பக்தர் ஆவார். இவர் இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற சிவாலயங்களில் தரிசனம் செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். 

இதனையடுத்து மகாசிவராத்திரியன்று வாரணாசியில் இவர் தன் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் ராமேஸ்வரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் பெரிய கோயில் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதியன்று கொல்கத்தாவிற்கு சென்று, பின்னர் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், 24ம் தேதி ஊரடங்கு அமலானதால் சென்னையிலேயே முடங்கியுள்ளார். இதனையடுத்து கைகளில் இருந்த பணமும் தீர்ந்துவிட, தான் வைத்திருந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொலைந்து, சென்னை வீதிகளில் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.  

ரஷ்யாவில் பணக்காரனாக இருந்து வந்து ருஸ்லான், உணவு மற்றும் தங்க வசதியின்றி சென்னையில் 3 வார காலமாக சுற்றி திரிந்துள்ளார். இவர் கூறுவதை கேட்ட வழிப்போக்கர், சென்னை மாநகராட்சியை அணுகுமாறு அறிவுறுத்தவே, சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 

இவரை அலுவகத்தில் பார்த்த அனைவரும் அச்சத்தில் ஒதுங்கவே, புரிந்து கொண்ட ருஸ்லான் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டுள்ளார். இதனையடுத்து இவரை விசாரணை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற விவரங்களை சேகரித்து, மாநகராட்சி தங்கும் இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும், இவர் பசியோடு இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், அங்கேயே உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர். இவர் சாப்பிடும் போது கடவுளை வணங்கி சாப்பிட்டார். இவருக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்பது குறித்து சோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரஷியாவின் தொழிலதிபர் மற்றும் பணக்கார நபர்களில் ஒருவர், சென்னையில் ஒருவேளை உணவிற்கு அலைந்தது சிவனின் விளையாட்டு.... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Business man went India to pray lord Shiva struggled Chennai due to corona amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->