தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது..! சிக்கியவனுக்கு அறிவித்த தண்டனை.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகில் வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (34). இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக இருந்தார். இதனால் சாட்சி சொல்ல விட கூடாது என்று கூறி இவரை கடந்த 2009-ம் ஆண்டு 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்திருக்கிறது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்த பிரைட் (39), பிரின்ஸ், பாஸ்கர் ஆகிய 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. 3 பேரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். 2017-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்திருந்தது.

அதன் பின்னர் பிரின்ஸ், பாஸ்கர் இருவரும் கோர்ட்டில் சரணடைந்துள்ளர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதில் பிரைட் மட்டும் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆரல்வாய் மொழி போலீசார் பிரைட்டை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரைட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரைட் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்று உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rowdy arrested in naagarkovil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->