மீண்டும் சேலத்திற்கே பணிமாற்றம்.? கண்டனங்களினால் பணிந்ததா அரசு.?.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்ட ஆட்சியராக கடந்த 18 மாதங்களாக கலெக்டர் ரோகினி பணியாற்றி வருகிறார். இவரை சென்னை இசைக்கல்லூரிக்கு ஜூன் 27ம் தேதி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரோகிணியுடன் 4 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சேலம் மாவட்ட ஆட்சியரே இடமாற்றம் செய்வதற்கு மட்டும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து பாரத இந்து மகா சபை சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளது.

அந்த சுவரொட்டிகளில் நேர்மையாக திறமையான செயல்பட்ட, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி அவர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீண்டும் அவரை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணி அமர்த்த வேண்டும். என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருக்கின்றது.

பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதை தொடர்ந்து தமிழக அரசு ரோகிணியை மீண்டும் பணியில் அமர்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் கிளம்பியுள்ளது.

Tamil online news

Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohini collector change selam collector will soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->