வங்கி ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை!! அதிரடி சம்பவத்தால் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(34). இவர் தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது குடும்பத்துடன் தேனியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பாலகிருஷ்ணனின் பக்கத்து வீட்டார்கள், அவரது வீட்டின் கதவு உடைந்து இருப்பதை, அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்து, விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பாலகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது, அப்போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. 

பீரோவில் அவர் வைத்திருந்த 6  பவுன் தங்க நகைகள் மரம் நபர்கள் மூலம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலத்தில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்து போன மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 
இது போன்ற சம்பவம் தேனி புறநகர் பகுதியில் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற பிறகு, மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்கின்றனர்.

வியாபாரிகள் போல் நோட்டமிட்டு பூட்டிற்கும் வீடுகளில் பூட்டுகளை உடைத்து தங்கள் கைவரிசையை கட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிச்சியடைந்து உள்ளனர்.

இதே போல் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robbery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->