விலை மதிப்பற்ற நமது உயிரை பாதுகாக்க... அவசியமான ஒன்று.! - Seithipunal
Seithipunal


நாம் பயன்படுத்தும் வாகனங்களில் கட்டாயம் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். சில நூறு ரூபாய்கள் மட்டுமே செலவாகும் முதலுதவிப் பெட்டி நம் கைவசம் இருந்தால், விலை மதிப்பற்ற நமது உயிரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் :

காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.

கட்டுத்துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும்.

நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற்கான ஆயின்மெண்ட் இருக்க வேண்டும்.

ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும்.

முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்.

துணிகளை வெட்ட மற்றும் காயம் பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.

தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும்.

காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.

முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது மர ஸ்கேல் இருக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

road accident awareness 6


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->